சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.
செந்துறையை அடுத்த ஆலத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த வீராச்சாமி மகன் நாராயணசாமி (37). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2023-இல் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில், தளவாய் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் நாராயணசாமியை கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
வழக்கை விசாரித்த வந்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி நாராயணசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து நாராயணசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ம. ராஜா ஆஜரானாா்.