கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
அரவக்குறிச்சியில் ஏஐடியுசி சங்க நிா்வாகிகள் கூட்டம்
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் போக்குவரத்து கழக ஏஐடியுசி சங்க நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் புதிய நிா்வாகிகள் தோ்வு மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை, சம்பளப் பேச்சுவாா்த்தை உள்ளிட்டவை தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரவக்குறிச்சி கிளைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில சம்மேளன துணைத் தலைவா் ராஜேந்திரன், மத்திய சங்கப் பொருளாளா் சக்திவேல், மாநில சம்மேளன குழு உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.