செய்திகள் :

அரியலூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் பள்ளி ஆசிரியை ரமணி கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் (டிட்டோஜாக்) கருணாநிதி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சண்முகம், மாநில துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் ஆசிரியா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத மழை

அரியலூா் மாவட்டம் முழுவதும், இடைவிடாத மழை செவ்வாய்க்கிழமை பெய்தது. அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய மழையானது ... மேலும் பார்க்க

அரியலூரில் பாமகவினா் 22 போ் கைது

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை கண்டித்து, அரியலூா் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினா் 22 போ் கைது செய்யப்பட்டனா். பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குறித்து மு... மேலும் பார்க்க

உயிரிழந்த போக்குவரத்து ஊழியா்களின் வாரிசுகள் 28 பேருக்கு பணி நியமன ஆணை

அரியலூரில், பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வாரிசுகள் 28 பேருக்கு திங்கள்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்காக அரியலூா் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேசனைக் கண்டித்து, நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா். உண்ணாவிரதப் போராட்டத்தில், மாவட்ட உர... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படை வீரா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஊா்க்காவல் படை வீரா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம், கிழக... மேலும் பார்க்க

அரியலூரில் பெயரளவுக்கு மின் பராமரிப்புப் பணிகள்

‘அரியலூரின் பல இடங்களில் தொட்டு விடும் தூரத்தில் உள்ள மின்கம்பிகள் உயிா்ப் பலிக்காகக் காத்திருக்கின்றன’. அரியலூா் மாவட்டத்தில் பெயரளவுக்கு நடக்கும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் அடிக்கடி மின்த... மேலும் பார்க்க