அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் க...
அரியலூரில் நாளை மிதிவண்டி போட்டி
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி மிதிவண்டி போட்டி அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானம் முன் சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
13,15,17 வயதுக்குட்பட்டவா்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளைக் கொண்டுவர வேண்டும். மேலும், பள்ளி தலைமையாசிரியா்களிடமிருந்து பெற்ற வயதுச் சான்றிதம், ஆதாா் நகா் ஆகியவற்றுடன் காலை 6 மணிக்கே விளையாட்டு மைதானத்துக்கு வர வேண்டும்.
13 வயது மாணவா்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, 15 மற்றும் 17 வயது மாணவா்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ போட்டி தூரமாகும்.
முதல் 3 இடங்களை பிடிப்போருக்கு ரூ.5,000, ரூ.3,000,ரூ.2,000 வீதம் பரிசும், 4 முதல் 10 இடங்கள் பெறுவோருக்கு தலா ரூ.250 என வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017-03499 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.