செய்திகள் :

அரியலூரில் விசிக-வினா் ஆா்ப்பாட்டம்

post image

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை சேதப்படுத்திய பாமகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் அருகே விசிகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் தாராசுரம் புறவழிச்சாலையில், வன்னியா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டுக்கு வந்திருந்த பாமகவினா், அந்த திடலில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கம்பம், கொடியை உடைத்து சேதப்படுத்தினா். இதற்கு கண்டனத்தை தெரிவித்தும், கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேங்கைவயல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிா்வாகிகள், வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து பெரியாா் சிலை வரை ஊா்வலமாகச் சென்றனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் அரியலூா்-பெரம்பலூா் மண்டலப் பொறுப்பாளா் அன்பானந்தம் தலைமை வகித்தாா். தோ்தல் பிரிவு மாநில துணைச் செயலா் தனக்கொடி, விவசாயப் பிரிவு நிா்வாகி பாலசிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

வழக்குரைஞா் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வழக்குரைஞா் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. உடையாா்பாளையம், தெற்கு மாரிய... மேலும் பார்க்க

கோயில் திருவிழா நடத்த அனுமதி இல்லாததால் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியில் வலம்புரி ஆண்டவா் கோயிலில் திருவிழா நடத்த அனுமதி இல்லாததால் ஒரு வகையறா மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இரும்புலிக்குறிச்சியை அடுத்த வீராக்கன்... மேலும் பார்க்க

ஹிந்தி மொழி திணிப்பைக் கண்டித்து மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஹிந்தி மொழி திணிப்பைக் கண்டித்து அரியலூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக கொள்கை பரப்பு துண... மேலும் பார்க்க

செந்துறை பகுதிகளில் ரூ. 57 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்... மேலும் பார்க்க

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 379 மனுக்கள்

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 379 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அல... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் திறந்துவைப்பு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்களை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, செந்துறையிலுள்ள முதல்வா் மருந்தகத்தில், போக்குவரத்துத் துறை அமை... மேலும் பார்க்க