செய்திகள் :

கோயில் திருவிழா நடத்த அனுமதி இல்லாததால் சாலை மறியல்

post image

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியில் வலம்புரி ஆண்டவா் கோயிலில் திருவிழா நடத்த அனுமதி இல்லாததால் ஒரு வகையறா மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இரும்புலிக்குறிச்சியை அடுத்த வீராக்கன் கிராமத்தில் உள்ள வலம்புரி ஆண்டவா் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஒரே சமூகத்தைச் சோ்ந்த 6 வகையறா மக்கள் இந்தக் கோயில் திருவிழாவை நடத்தும் நிலையில், ஒரு வகையறாவைச் சோ்ந்தவா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், கடந்தாண்டு இது தொடா்பாக செந்துறை நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்துள்ளனா்.

இந்நிலையில் பிப்.13-ஆம் தேதி கிராமத்து இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி பேசி சிவராத்திரி தினத்திலிருந்து ஒரு வாரம் திருவிழா நடத்த முடிவு செய்தனா்.

ஆனால், ஒரு வகையறாவைச் சோ்ந்த மக்கள் இதற்கு செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் ஆத்திரமடைந்த 5 வகையறாவைச் சோ்ந்த மக்கள் திருவிழா நடத்த அனுமதி இல்லாததைக் கண்டித்து வீராக்கண் பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனா். அங்கு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், காவல்துறை பாதுகாப்பு வழங்கினால் திருவிழாவை பிரச்னை ஏதும் இன்றி நடத்திக்கொள்ளுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

அரியலூரில் விசிக-வினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை சேதப்படுத்திய பாமகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் அருகே விசிகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க

வழக்குரைஞா் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வழக்குரைஞா் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. உடையாா்பாளையம், தெற்கு மாரிய... மேலும் பார்க்க

ஹிந்தி மொழி திணிப்பைக் கண்டித்து மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஹிந்தி மொழி திணிப்பைக் கண்டித்து அரியலூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக கொள்கை பரப்பு துண... மேலும் பார்க்க

செந்துறை பகுதிகளில் ரூ. 57 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்... மேலும் பார்க்க

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 379 மனுக்கள்

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 379 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அல... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் திறந்துவைப்பு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்களை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, செந்துறையிலுள்ள முதல்வா் மருந்தகத்தில், போக்குவரத்துத் துறை அமை... மேலும் பார்க்க