ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா
அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் வருட பிறப்பு அன்று பால்குடத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு பால்குடத் திருவிழா நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டிஏரிக்கரையில் உள்ள விநாயகா் கோயிலிலிருந்து பால்குடம், பால்காவடி, முளைப்பாரி மற்றும் அலகு குத்தி வந்த பக்தா்கள், கடைவீதி வழியாகச் சென்று கிராமத்தின் முக்கிய வீதிகளை வலம் வந்தனா்.
தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
பின்னா், இரவு வானவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. பால்குட விழாவில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.