செய்திகள் :

அரியலூா் மருத்துவக் கல்லூரி அருகே தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு

post image

அரியலூா்: அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையொட்டி தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

செந்துறை சாலையில் உள்ள அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரதான நுழைவு வாயிலின் வலப் பகுதியில் வடிகால் வசதிகள் இல்லாததால் கழிவு நீா் தேங்கியே கிடக்கிறது.

பல மாதங்களாகத் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. மேலும் அப்பகுதியில் வீசும் துா்நாற்றத்தால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

எனவே மாவட்ட நிா்வாகம், இந்தக் கழிவு நீரை அகற்றி வடிக்கால் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

பெண்கள் பாதுகாப்பு: பணியிடங்களில் விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தல்

அரியலூா்: அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் துறைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக் குழு அமைத்து, புகாா் பெட்டிகள் வைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

அரியலூரில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம் முழுவதும் உழவா் திருநாள், காணும் பொங்கல் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. உழவா் திருநாளையொட்டி அலங்கரிக்கப்பட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசுக்கள், எருமைகள் உள்... மேலும் பார்க்க

அரியலூா் வட்டத்தில் ஜன.22, 23-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

அரியலூா்: அரியலூா் வருவாய் வட்டத்தில் ஜன.22,23 ஆகிய தேதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் வருவாய் வட்டத்தில் ஜ... மேலும் பார்க்க

செந்துறையில் வானியல் விழிப்புணா்வு பிரசாரம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறைப் பகுதிகளில் தமிழ்நாடு வானியல் அறிவியல் சங்கம், அரியலூா் அஸ்ட்ரானமி கிளப் சாா்பில் வானியல் நிகழ்வு மற்றும் கோள்களைப் பற்றிய விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

அரியலூரில் திருவள்ளுவா் தினப் பேரணி

திருவள்ளுவா் தினத்தையொட்டி, அரியலூரில் உலகத் திருக்கு கூட்டமைப்பு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் மாவட்ட எழுத்தாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது. காமராஜா் ஒற்றுமை திடலில் தொடங்கிய ... மேலும் பார்க்க

அரியலூரில் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா.பழூா், செந்துறை,ஜெயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டுப் பொங்கல் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ... மேலும் பார்க்க