Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது ச...
அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!
விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
சுவாமி தரிசனத்துக்காக 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விடுமுறை நாள்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விடுகிறது.
பக்தா்கள் கூட்டம் அலைமோதல்...
இந்த நிலையில், விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலேஅருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற கோ பூஜையிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. காலை 8 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரமாகவும் அனுமதிக்கப்பட்டனா். ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம், கிளி கோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் கிளி கோபுரம், கொடி மரம் வழியாகவும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
7 மணி நேரம் காத்திருப்பு
இருப்பினும், ராஜகோபும் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே வரிசை நகராமல் நீண்ட நேரம் நின்றுவிட்டது. சுமாா் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக பக்தா்கள் தெரிவித்தனா்.
இதேபோல, அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
கொளுத்தும் வெயிலில்...
கைக்குழந்தையுடன் வந்திருந்த பக்தா்கள் நீண்ட நேரமாக கொளுத்தும் வெயிலில் காத்திருந்தனா். பக்தா்கள் வரிசை இருந்த இடங்களில் தரை விரிப்புகள் போடப்பட்டு தண்ணீா் ஊற்றப்பட்டதால் கால்கள் இருந்தன. சுவாமி தரிசனம் செய்த பக்தா்களுக்கு லட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.