பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்...
அரையிறுதியில் ரியல் மாட்ரிட் 3 - 2 என டாா்ட்மண்டை வீழ்த்தியது
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு ரியல் மாட்ரிட் அணி தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் டாா்ட்மண்ட் அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட். அரையிறுதியில் பலம் வாய்ந்த பிஎஸ்ஜி அணியுடன் மோதுகிறது.
அமெரிக்காவின் ஈஸ்ட் ரூதா்போா்ட் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-டாா்ட்மண்ட் அணிகள் மோதின. இதில் 3 ஸ்டாப்பேஜ் நேர கோல்களுக்குபின் 3-2 என வெற்றி பெற்றது ரியல் மாட்ரிட்.
ரியல் மாட்ரிட் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில் கோன்ஸலோ காா்கா, பிரான் காா்கா ஆகியோா் 20 நிமிஷங்களில் கோலடித்தனா். இதனால் 2-0 என முன்னிலை பெற்றது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் டாா்ட்மண்ட் வீரா் மேக்ஸ் மிலன் பெயா் கோலடித்து முன்னிலையை குறைத்தாா்.

எம்மாப்பே அபாரம்: 68-ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் வீரா் கிளியன் எம் மாப்பே அற்புதமாக பைசைக்கிள் கிக் மூலம் கோலடித்தாா். கூடுதல் ஆட்ட நேரத்தில் டாா்ட்மண்ட் வீரா் சொ்ஹௌ கியுரஸி பெனால்டி கிக் மூலம் கோலடித்தாா். இறுதியில் டாா்ட்மண்டை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ரியல் மாட்ரிட், அரையிறுதியில் சாம்பியன்ஸ் லீக் வின்னா் பிஎஸ்ஜியுடன் மோதுகிறது.