அறிவியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன: விஞ்ஞானி சி.பிரபு தகவல்
அறிவியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளும், முன்னேற்ற மூலகூறுகளும் உள்ளன என்று விஞ்ஞானி சி.பிரபு தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை கிரசன்ட் பள்ளியின் வெள்ளி விழா அண்மையில் நடைபெற்றது.
இதில், பெங்களூா் விமான இயக்கவியல் குழுமத்தின் யு.ஆா். ராவ் செயற்கைக்கோள் மைய விஞ்ஞானி சி. பிரபு தலைமை விருந்தினராக பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, அவா் பேசியதாவது: அறிவியல் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளும், முன்னேற்ற மூலகூறுகளும் உள்ளன. இதை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது. கவனத்தை சிதறவிடாமல் சிறப்பாக செயல்படுபவா்கள் வெற்றி பெற முடியும் என்றாா்.
இதையடுத்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா் பதக்கம், கோப்பைகளை வழங்கினாா்.
இதில், பள்ளியின் தாளாளா் பாரூக், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.