செய்திகள் :

`அறிவுள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?' - மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அமைச்சர் பி.டி.ஆர் காட்டம்

post image

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தோல்வி அடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சிக்கிறது. வெற்றி அடைந்த நம்முடைய மாடலை எடுத்துவிட்டு நான் சொல்கிற தோல்வியுற்ற மாடலை பின்பற்று என்று சொன்னால் என்ன அர்த்தம்? அறிவுள்ளவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா?

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

சுயமரியாதை எல்லாம் இரண்டாவது, முதலில் அறிவு இருப்பவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா.? மும்மொழிக் கொள்கை முதன் முதலில் 1968 -ஆம் ஆண்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை மும்மொழிக் கொள்கை என்று சொல்லி வருகிறார்கள். 57 வருடங்கள் ஆகியும் மும்மொழிக் கொள்கையை எங்குமே முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.

யாரெல்லாம் தமிழ்நாட்டைப்போல இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறார்களோ அங்கு தேசிய சராசரியை விட சிறப்பான நிலையை அடைந்துள்ளது. நமக்குத் தமிழ், உலகிற்கு ஆங்கிலம் என்றார் அண்ணா.

குறை தீர்க்கும் முகாமில்

உத்தரப்பிரதேசத்திலோ, பீகாரிலோ, மத்தியப் பிரதேசத்திலோ இருமொழிக் கொள்கையை அமல்படுத்தி இருந்திருந்தாலே நமக்கு 3-வது மொழியே தேவைப்படாது. இரண்டாவது மொழியை ஒழுங்காக கற்றுக் கொடுத்திருந்தாலே ஆங்கிலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மொழியை திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. இரண்டாவது மொழியையே சிறப்பாக கற்றுத்தர முடியாதவர்கள், மூன்றாவது மொழியை படிக்கச் சொன்னால் அதனை ஏற்க முடியுமா.? இதை எல்.கே.ஜி படிப்பவர்கள் முனைவர் பட்டம் படிப்பவர்களிடம் வந்து இப்படிப் படியுங்கள் எனச் சொல்வதுபோல உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்" என்றவர்...

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தொடர்ந்து பேசும்போது, "ஒரு ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின் முக்கிய கடமை மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்ப்பது. அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மாமன்ற உறுப்பினரும் அலுவலகம் மூலம் மக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் ஆன்லைன், வாட்ஸ்அப் மூலமும் மக்களின் கோரிக்கைகளை புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கிறோம்" என்றார்.

கார்ட்டூன்: சுத்தி சுத்தி ரெய்டு..!

கார்ட்டூன்: சுத்தி சுத்தி ரெய்டு..! மேலும் பார்க்க

மல்ஹர் சர்டிஃபிகேட்: இந்துக்கள் மட்டும் நடத்தும் மட்டன் கடை - திறந்துவைத்த மகாராஷ்டிரா அமைச்சர்

மட்டன் கடைகளில் விலங்குகளை வெட்டும்போது முஸ்லிம்கள் ஹலால் முறையைப் பின்பற்றுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு ஹலால் முறையில் வெட்டப்படும் விலங்குகளின் இறைச்சிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ... மேலும் பார்க்க

TVK : 'உங்கள் மீதான விமர்சனங்களை மறைக்க பெரியாரை இழுப்பதா?' - மத்திய அரசுக்கு எதிராக விஜய் காட்டம்!

நாடாளுமன்றத்தில் பெரியார் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.tvk vijayஅவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பெரியார், தமிழைக் காட்டும... மேலும் பார்க்க