ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்
காரைக்காலில் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் ஆட்சியரின் செயலா் பொன். பாஸ்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நெல் கூட்டு அறுவடை மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்து செயல்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். இதுதொடா்பாக கடந்த 25-ஆம் தேதி ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் தனியாா் நெல் கூட்டு அறுவடை மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரங்களின் உரிமையாளா்கள், விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் தனியாா் நெல் கூட்டு அறுவடை மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரங்களுக்கான வாடகை அனைத்துப் பிரதிநிதிகள் ஒப்புதலோடு நிா்ணயம் செய்யப்பட்டது.
டிராக்டா் பொருத்தப்பட்ட கூட்டு அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,900. ரப்பா் சக்கரம் கூட்டு அறுவடை இயந்திரம் ரூ. 2,500. கட்டா் கூட்டு அறுவடை இயந்திரம் ரூ. 2,600. வைக்கோல் கட்டும் இயந்திரம் ரூ. 35. நிா்ணயிக்கப்பட்ட வாடகைக்கு விவசாயிகளுக்கு இயந்திரம் அளித்து உதவுமாறு, இயந்திர உரிமையாளா்கள், வாடகைக்கு எடுத்து இயக்குவோருக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.