பரந்தூர் : `பண்ணூரை விட பரந்தூரில் குடும்பங்கள் குறைவு..!" - தமிழக அரசு கூறுவதென...
அலட்சியம் ஏற்றுக்கொள்ள முடியாது: அதிகாரிகளை எச்சரிக்கும் ஆதித்யநாத்!
மக்களின் ஒவ்வொரு பிரச்னையையும் தீர்ப்பதற்கு உத்தரப் பிரதேச அரசு தயாராக இருப்பதாகவும், யாரும் அநீதியை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கோரக்நாத் கோயிலின் மஹந்த் திக்விஜய்நாத் ஸ்மிருதி பவனில் நடைபெற்ற ஜனதா தரிசனத்தில் சுமார் 100 குடிமக்களை யோகி ஆதித்யநாத் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஜனதா தரிசனத்தின் போது, மருத்துவச் சிகிச்சைக்கு நிதி உதவி கோரி பலர் முதல்வரை அணுகினர். அவர்களின் சிகிச்சைக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் உறுதியளித்தார். சிகிச்சை செலவு மதிப்பீடுகளை விரைந்து தயாரித்து நிர்வாகத்திற்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவ உதவி கோரிய ஒரு பெண்ணுக்கு, மருத்துவக் கல்லூரி அல்லது சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது. முதல்வரின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி, உடனடி தீர்வுக்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மக்களின் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காண அரசு தயாராக உள்ளது. எனது நிர்வாகத்தில் யாரும் அநீதியைச் சந்திக்க மாட்டார்கள். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் தாமதம் அல்லது அலட்சியம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அதிகாரிகளை அவர் எச்சரித்தார்.