அழகர் கோவிலில் பிக் பாஸ் பவித்ரா ஜனனி! ரசிகர்கள் பகிர்ந்த விடியோ!
மதுரை அழகர் கோவிலில் பிக் பாஸ் புகழ் பவித்ரா ஜனனி சாமி தரிசனம் செய்தார்.
மேலும், அங்கிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை ரசிகர் ஒருவர் விடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 போட்டியாளர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் பவித்ரா ஜனனி. மென்மையான மனதுடையவர்கள் பிக் பாஸ் போட்டியில் நீடிக்க முடியாது என்ற விதியை மாற்றிக் காட்டியதால், இவருக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி இவர் நடித்த ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னைத் தொடும் போன்ற தொடர்கள் மூலமும் தனக்கென தனி ரசிகர்களைச் சேர்த்துள்ளார்.
இதுவரையிலும் 14க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள பவித்ரா, 2013ஆம் ஆண்டின் தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் காந்தாரியாக நடித்து, சின்ன திரையில் அறிமுகமானார். அறிமுகமான தொடரிலேயே பவித்ராவின் நடிப்பு பலரின் பாராட்டைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆபிஸ், சரவணன் மீனாட்சி, லட்சுமி வந்தாச்சு, பகல் நிலவு, ராஜா ராணி, மெல்லத் திறந்தது கதவு, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னைத் தொடும் என பல்வேறு தொடர்களில் நடித்தார்.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு வாய்ந்த போட்டியாளராகவும் விளங்கினார். இதனால், பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஆன்மிகத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்ட பவித்ரா, அடிக்கடி கோவில்களுக்குச் செல்வது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் மதுரையில் உள்ள அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
மேலும், கோயிலில் சூழ்ந்த ரசிகர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான விடியோ இணையத்தில் அவரின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பணத்தில் கிடைக்காத மகிழ்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி பகிர்ந்த விடியோ!