செய்திகள் :

அழகு முதல் ஆரோக்கியம் வரை; சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காதீங்க!

post image

வெளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது. ஆனாலும் நம்மூர் சாதம் வடித்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை.

இரண்டு வெங்காயம் அல்லது கொஞ்சம் துவையலோடு கஞ்சி இருந்தால் வரம். “கஞ்சி என்பது வெறும் ஆகாரம் மட்டுமல்ல... ஆரோக்கிய பானமும்கூட. முகப்பொலிவு, கூந்தல் பராமரிப்புக்கும்கூட உதவும்’’ என்கிறார் டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ்.

சாதம் வடித்த கஞ்சியின் ஆரோக்கிய பலன்கள்
சாதம் வடித்த கஞ்சியின் ஆரோக்கிய பலன்கள்

''சாதம் வடித்த கஞ்சியில் மாவுச்சத்து அதிகம். புரதச்சத்தும் சிறிதளவு இருக்கிறது. அதே நேரம், தவிடு சேர்ந்த அரிசியில் வடித்த கஞ்சியில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி, இனோசிட்டால், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி சாதத்தில் செய்யப்பட்ட கஞ்சியில், வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. சாதம் வடித்த கஞ்சியைப் புளிக்கவைத்து மறுநாள் சாப்பிட்டால், அது கூடுதல் நன்மைகளைத் தரும்.

திரவ உணவாக இருப்பதால் மென்று சாப்பிட வாய்ப்பில்லாமல் அப்படியே விழுங்குவோம்; அது மிக விரைவாக செரிமானமாகிவிடும். மென்று சாப்பிட முடியாதவர்கள், விழுங்க முடியாதவர்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் உடல்நலமில்லாதவர்கள் மட்டுமே சாதம் வடித்த கஞ்சியை அருந்த வேண்டும். உடனடி எனர்ஜி கிடைக்கும்.

சாதம் வடித்த கஞ்சியும் அழகும்...
சாதம் வடித்த கஞ்சியும் அழகும்...

ரசாயனம் தெளிக்கப்படாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசியில் வடித்த கஞ்சியைத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகும். இந்தக் கஞ்சியை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

ஆரோக்கியமான உடல்நலத்தோடு இருப்பவர்கள் கஞ்சி குடித்ததும், அதற்கேற்ப உடல் உழைப்பு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கொழுப்பு சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும்.

'கிளைசெமிக் இண்டெக்ஸ்’ அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மட்டும் கண்டிப்பாக கஞ்சியைத் தவிர்க்க வேண்டும். பருமனாக இருப்பவர்களும் கஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.''

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போனால் சூடான எண்ணெய் விடுவது சரியா?!

Doctor Vikatan: தூங்கும்போது சில நேரங்களில் காதுக்குள் பூச்சி புகுந்துவிடுவது நடக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் காதுக்குள் சூடான எண்ணெய் விட்டால் பூச்சி வெளியே வந்துவிடும் என்கிறார்களே, அது சரியா... ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகர் ரோபோ சங்கரை பாதித்த மஞ்சள் காமாலை பயங்கர நோயா? - தீர்வு என்ன?

Doctor Vikatan: மஞ்சள் காமாலை தீவிரமாகி, நடிகர் ரோபோ சங்கர் இறந்திருக்கிறார். மஞ்சள் காமாலை பாதிப்பில் உயிரிழக்கும் நபர்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது அவ்வளவு பயங்கர நோயா... வராமல் தடுக்... மேலும் பார்க்க

Vitamin Tale: நம்ம உடம்புக்குள்ள இருக்கிற ஓர் இளவரசியோட கதை இது!

எத்தனையோ கதைகளைப் படிச்சிருப்பீங்க. ஒரு வைட்டமினோட கதையைப் படிச்சிருக்கீங்களா..? இன்னிக்கு ஒரு வைட்டமினோட கதையை சொல்லப் போறோம். அதுவோர் அழகான பிங்க் நிற இளவரசி. இந்தக் கதையை சொன்னவர் சென்னையைச் சேர்ந்... மேலும் பார்க்க

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளு... மேலும் பார்க்க

மஞ்சள் காமாலை : எதனால் ஏற்படுகிறது, குணப்படுத்துவது எப்படி? - விரிவான தகவல்கள்

கல்லீரல்... மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமா... மேலும் பார்க்க

தினமும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாமா? - எச்சரிக்கும் மருத்துவர்கள்

`ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்' என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த `ஒரு நாளைக்கு ஒன்று' பழக்கம் நெல்லிக்காய்க்கும் பொருந்தும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல் நீங்கும்... மேலும் பார்க்க