செய்திகள் :

அவதூறுகளால் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்

post image

சிவகங்கை: அவதூறுகளாலும் பொய்களாலும் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.161 கோடியில் 53,039 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக சார்பில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் இதுவரை 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இன்னும் 116 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட வேண்டும். அரசில் மொத்தம் 34 துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் 2, 3 திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அளவில்தான் வாக்குறுதிகள் மீதம் இருக்கின்றன. நாங்கள் இதை ஒப்புக்கொள்கிறோம். மறுக்கவில்லை.

கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளை எடுத்து ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றிய நாள், இதனால் பயனடைந்தவர்கள் விவரம் என்ற பட்டியலை புத்தகமாக அதிமுகவினர் வெளியிடுவார்களா?.

முழுவதுமாக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து, தமிழ்நாட்டை அதலபாதாளத்தில் தள்ளியதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து, புது புதுக் கதைகளோடு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர். தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாழாக்கியவர்கள், மாநிலம் திவாலாகிவிட்டது என்று புது புரளியைக் கிளப்புகிறார்கள். அவதூறுகளாலும் பொய்களாலும் திமுக ஆட்சியை வீழ்த்த முடியுமா என்று பார்க்கிறார்கள். அது, நிச்சயம் முடியாது.

2011 திமுக ஆட்சிக் காலத்தில் உபரி வருவாய் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, 2013-ஆம் ஆண்டுமுதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு.

கடந்த 2017-19-ஆம் ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிக அளவு வருவாய்ப் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை தத்தளிக்கவிட்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான நெருக்கடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம்.

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள்: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம். இந்த மாவட்டத்தில் 91,265 பேருக்கு ரூ.38.52 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து இன்னும் அதிகமாகச் செய்து தர இருக்கிறோம். இதற்கு அடையாளமாக இந்த விழாவில் 3 திட்டங்களை அறிவிக்கிறேன்.

தற்போது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும் கட்டடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளாவதால், பழுதடைந்தும், இடப் பற்றாக்குறையாகவும் உள்ளது. அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் சிறப்பாகச் செயல்படும் வகையில் ரூ. 89 கோடியில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும்.

சிங்கம்புணரி, திண்டுக்கல், காரைக்குடி நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள்-திருப்பத்தூர் நகரப் பகுதிக்குள் வராமல் செல்லும் வகையில், திருப்பத்தூர் நகரத்துக்கு ரூ.50 கோடியில் புதிய புறவழிச் சாலை அமைக்கப்படும்.

கடந்த ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இதையெல்லாம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 20 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை என்று கூறியிருக்கிறார். அவரால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா?

நான் சிவகங்கைக்கு வந்ததிலிருந்து மக்கள் கொடுத்த வரவேற்பையும், அவர்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியையும் பார்க்கும்போது தொடர்ந்து தமிழ்நாட்டில் மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

விழாவில் அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், கோவி. செழியன், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பேரவை உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), எஸ். மாங்குடி (காரைக்குடி) மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நிதியுதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் கோவி. செழியன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், கே.ஆர். பெரியகருப்பன், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாங்குடி, தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர்.

பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா: ஆளுநர் ஒப்புதல்

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.கடந்த பத்தாம் ஆம் தேதி பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 112.16 அடியில் இருந்து 111.92 அடியாகக் குறைந்தது.அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 196கன அடியிலிருந்து வினாடிக்கு 207 அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையி... மேலும் பார்க்க

ஆப்கனில் சீனர் கொலை! தலிபான் அரசு அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு மாகாணத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தலிபான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தஷ்கர் மாகாணத்தில் பயணம் செய்தபோது ‘லீ’ எனும் பின்பெயரைக் க... மேலும் பார்க்க

செய்வினை சந்தேகத்தில் கொலைவெறி தாக்குதல்! 70 வயது மூதாட்டி பலி!

ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டத்தில் செய்வினை வைத்ததாக சந்தேகித்து அடித்தும், கத்தியால் குத்தியும் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி பலியானார்.ராயகாடாவின் மண்கடஜோலா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம்: நாளை(ஜன. 23) மகிழ்ச்சியான தகவல் வரும்! - அண்ணாமலை

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை(வியாழக்கிழமை) மகிழ்ச்சியான தகவல் வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்ட... மேலும் பார்க்க

இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பிய பாப் பாடகருக்கு மரண தண்டனை!

ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஒருவர் இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பியதற்காக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.ஈரானை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகரான டட்டலூ என்... மேலும் பார்க்க