செய்திகள் :

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரசியங்கள்... டிராக்டர், கார், பைக் பரிசுகளை வென்ற இளைஞர்கள்..!

post image

அனல் பறக்க நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில்  அதகளப்படுத்தி டிராக்டர், கார், பைக் என்று பரிசுகளை கைப்பற்றி வியக்க வைத்துள்ளார்கள் பங்கேற்பாளர்கள்.

முதல் பரிசு பெற்ற வீரர் கார்த்திக்

மதுரை மாவட்டத்தில் பிரபலமான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2026 காளைகளும் 1735 வீரர்களும் பதிவு செய்திருந்தனர். 925 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு, 888 காளைகள் அனுமதி அளிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் 37 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 பேர் வீதம் 500 வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 11 -வது சுற்றில் விளையாடினார்கள்.

ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இன்று காலை உற்சாகமாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை பிடித்து முதல் பரிசு பெற்ற திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் பட்டதாரியான் கார்த்திக்கிற்கு துணை முதலமைச்சர் பெயரில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிஸ்ஸான் காருடன், கன்றுடன் கறவை மாடு பரிசு வழங்கப்பட்டது. 15 காளைகள் பிடித்த இரண்டாம் இடம் வந்த குன்னத்தூரை சேர்ந்த திவாகருக்கு மோட்டார் பைக்கும், 14 காளைகள் பிடித்து திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் மூன்றாமிடம் வந்தார்.

முதல் பரிசுபெற்ற காளைக்கு பரிசு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் வி.கே.சசிகலாவின் பெயரில் விட்ட காளை சிறப்பாக விளையாடி முதல் பரிசாக தமிழக முதலமைச்சர் பெயரில்  11 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டரும்,  கன்றுடன் கறவை மாடும் வழங்கப்பட்டது. பல ஊர்களில நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் சசிகலா பெயரில் காளைகளை விடுவதை இவர் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த வெற்றி புத்தாண்டில் சசிகலாவுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று பெருமிதமாகக் கூறினார். இரண்டாம் இடம் வந்த  ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளைக்கு டூ வீலர் பரிசாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்காளை-ரவிமணிமாறன் சகோதரர்களின் காளையை பிடித்தால் ஒரு லடசம் ரூபாயுடன் இரண்டு தங்கக்காசுகள் என்று பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த காளையை அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் அடக்கி பரிசை பெற்றுச் சென்று ஆச்சரியப்படுத்தினார்.

உயிரிழந்த வீரர் நவீன்குமார்

மிகவும் உற்சாகமாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடியை சேர்ந்த வீரர் நவீன்குமார் மாடு முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

Pongal 2025: சேலத்தில் EPS-ன் பொங்கல் விழா கொண்டாட்டம்... தூள் கிளப்பிய அதிமுகவினர் | Photo Album

கலைநிகழ்ச்சி கலைநிகழ்ச்சி 108 பொங்கல்108 பொங்கல்ஜல்லிக்கட்டு காளைஜல்லிக்கட்டு காளைஜல்லிக்கட்டு காளைஜல்லிக்கட்டு காளைவள்ளி கும்மி ஜல்லிக்கட்டு காளைஜல்லிக்கட்டு காளை108 பொங்கல்மேடையில் எடப்பாடி பழனிசாமி... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: துள்ளிப் பாய்ந்த காளைகள், ஏறுதழுவி வென்ற வீரர்கள்.. | Photo Album

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபு... மேலும் பார்க்க

விழுப்புரம்: பெஃஞ்சல் புயலால் வெளிவந்த 2000 ஆண்டுகள் பழமையான சங்க கால பொருள்கள்..!

வட தமிழகம் மாவட்டங்களான விழுப்புரம் பெஃஞ்சல் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பேரிடரால் இயற்கை வளங்களும் விலங்குகளும் எதிர்பார்க்க முடியாத அளவில் பாதிக்கப்பட்டது. விழுப்புரம் அருகே பம்பை ஆற்றின் வடகற... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு 2025 Live: தொடங்கியது உலகப்புகழ்பெற்ற ஏறுதழுவுதல் விளையாட்டு!

குவியும் பரிசுகள்!பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு துணை முதலமைச்சர் வழங்கும் கார் பரிசாக வழங்கப்படும். முதலிடம் பெறும் மாடுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கும் ட்ராக்டர் பரிசாக வழங்கப்பட... மேலும் பார்க்க

Jallikattu 2025: ஜல்லிக்கட்டுக்குள் இறங்கும் பாடி பில்டர்; போர்க்குணம் கொண்ட புலிக்குளம் காளைகள்

அறிமுகமில்லாதவர்கள் அருகே நெருங்கினால் புலி போல உறுமும்... புலியையே தன் கொம்பால் குத்தி வீசி விடும். அந்தளவுக்கு கூர்மையான கொம்புகளைக்கொண்ட காளை. போர்க்குணம் கொண்டது; ஏறு தழுவலுக்கு ஏற்றது.ஒரு பாடி பி... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிய TTV தினகரன் காளை; நின்று விளையாடிய VK சசிகலா காளை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் கண்ட சசிகலா, தினகரன் காளைகள் வெற்றி பெற்றுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு மரபார்ந்த வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் பல ஊர்களில்... மேலும் பார்க்க