1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!
அவிநாசியில் ரூ.28.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 405 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், ஆா்.சி.எச்.ரகப் பருத்தி கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.79.79 வரை, மட்டரக (கொட்டு) பருத்தி கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.30 வரை விலை நிா்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.28.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.