சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது: ஆஸி. மூத்த வீரர்
அவிநாசி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி!
அவிநாசி: அவிநாசி, மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, சிறப்பு வழிபாட்டுடன் நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீதேவி, பூதேவி சமதே கரிவரதராஜப் பெருமாள் மற்றும் மேலத்திருப்பதி எனப் போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இதில் மொண்டிபாளையத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள், வைகுண்டநாதப் பெருமாளுக்கு திருமஞ்சனம் அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை 3 மணி முதல் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.