செய்திகள் :

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்

post image

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்குப் பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்கள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திவரும் சூழலில் புதின் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது அமைச்சர்கள் மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடன் காணொலி மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் புதின் பேசியதாவது:

அரியவகை கனிமங்கள் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து கூட்டாண்மை நாடுகளுடனும் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம். ரஷியாவில் இருந்து அமெரிக்கா பெருமளவில் அலுமினியம் இறக்குமதி செய்துவந்தது. அதை அந்த நாடு மீண்டும் தொடங்கலாம்.

உக்ரைனில் இருப்பதைவிட ரஷியாவில் மிக அதிகமாக கனிம வளம் உள்ளது. அரியவகைக் கனிமங்களை தோண்டியெடுப்பதற்காக அமெரிக்காவுடன் மேற்கொள்ளக்கூடிய ஒப்பந்தத்தில் உக்ரைன் பகுதியாக இருந்து தற்போது ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளும் இடம் பெறும் என்றார் புதின்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது. அதையடுத்து, அப்போதைய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசுக்கு எதிர்மாறான நிலைப்பாட்டை மேற்கொண்டுவருகிறார்.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறும் டிரம்ப் அரசு, உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்று திட்டவட்டமாகக் கூறிவருகிறது.

மேலும், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக முந்தைய அமெரிக்க அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் உரையாடி டிரம்ப் உறவைப் புதுப்பித்துக்கொண்டார். இன்னும் சில வாரங்களில் அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, போரில் உக்ரைனுக்கு தாங்கள் அளித்த உதவிகளுக்கு ஈடாக அந்த நாட்டின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்திவருகிறார்.

இந்தச் சூழலில், ரஷியாவுடன் மிகப் பெரிய அளவிலான பொருளாதார மேம்பாட்டு பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் அவ்வாறு கூறிய சில மணி நேரங்களில் முன்னறிவிப்பின்றி அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் கூட்டத்தைக் கூட்டிய அதிபர் புதின், ஆக்கிரமிப்பு உக்ரைன் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் அரியவகைக் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்ட்.! ஜாக்பாட் யாருக்கு?

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக அதிபர் டிரம்ப் புதிய கோல்டு கார்ட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர் டிர... மேலும் பார்க்க

காங்கோ: மா்ம நோயில் 53 போ் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய் காரணமாக இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்.இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் அடையாளம் தெ... மேலும் பார்க்க

தென் கொரியா: பாலம் இடிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு

தென் கொரிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சியோல் நகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சியோனன் நகருக... மேலும் பார்க்க

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது பிரிட்டன்

பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக பிரிட்டன் அரசு உயா்த்தியுள்ளது.ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் பிராந்... மேலும் பார்க்க

ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடா்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதன்படி ஆஸ்டின்ஷிப், பிஎஸ்எம... மேலும் பார்க்க

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்திய பெட்ரோல் குழாய் திட்டம் அமல்: இலங்கை

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் என இலங்கை தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவா் ராஜகருணா தெரிவித்தாா். இந்த விவ... மேலும் பார்க்க