செய்திகள் :

ஆங்காங்கே தென்படும் அறிகுறிகள்... மீண்டும் உருவாகிறதா அதிமுக - பாஜக கூட்டணி?!

post image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உருவானது அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி. இந்த கூட்டணி தேர்தலில் வெற்றியை தேடி தரவில்லையென்றாலும், மத்தியில் இருந்து ஆதிக்கம் அதிகமாக இருந்தால்தான், அ.தி.மு.க-வுக்கு வேறு வழியே இல்லாத நிலைமை இருந்தது.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக அதிமுக-வை தாக்கி பேசி வந்ததால், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கூட்டணி முறிந்ததாக அ.தி.மு.க அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தலை தனித்தனியே கூட்டணி அமைத்து சந்தித்தனர். இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியதாக பா.ஜ.க வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனிடையே, திரைமறைவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அதிமுக பா.ஜ.க கூட்டணி மீண்டும் மலரபோகிறது என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அ.தி.மு.க அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.

“ கட்சிக்குள் இருந்த பா.ஜ.க எதிர்ப்பை பிரதிபலிக்கும் விதமாக 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த செயற்குழுவில், ‘தமிழக மீனவர் நலனில் அக்கறையின்மை மற்றும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு எதிராக’ கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், டிசம்பரில் நடந்த பொதுக்குழுவில் மத்திய அரசுக்கு எதிராக சுரத்துள்ள ஒரு கண்டனத் தீர்மானம்கூட நிறைவேற்றப்படவில்லை. என்னதான் பா.ஜ.க-வுடன் கூட்டணி முறிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டாலும், டெல்லி பா.ஜ.க தலைவர்கள் குறித்தோ... மத்திய அரசு குறித்தோ பொதுச் செயலாளர் எடப்பாடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கிடையாது.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக த.வெ.க கூட்டணியை எடப்பாடி எதிர்பார்க்கிறார். த.வெ.க வந்துவிட்டால், பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை விஜய் கைகொடுக்கவில்லையென்றால், பா.ஜ.க-வுடன் இருக்கும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வராது. இதை மனதில் வைத்துதான் பா.ஜ.க-வை பகைத்து கொள்ளக்கூடாதென்று எடப்பாடி உறுதியாக இருக்கிறார். அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய அமித்ஷா குறித்து எடப்பாடி கருத்துக்கூட சொல்லவில்லை.

வழக்குகளுக்கு பயந்து கொங்கு மாஜிக்களும் பா.ஜ.க கூட்டணியையே விரும்புகிறார்கள். சில ரகசிய பேச்சுவார்த்தைகளும் அரங்கேறி வருகிறது என்கிறார்கள். இதனால்தான், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் வேந்தராக இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பெயரளவில்கூட அ.தி.மு.க விமர்சனம் செய்யவில்லை.

விஜய்

இப்படி கடந்த சில முக்கிய விவகாரங்களில் பா.ஜ.க எதிர்ப்பு என்பதை அ.தி.மு.க சுத்தமாக மறந்தேவிட்டது. குறிப்பாக, வரும் தேர்தலுக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்களை தீவிரமாக தேடி வருகிறது தலைமை. அதிலும், பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருக்கும் வியூக வகுப்பாளர்கள்தான் தலைமையுடன் பேசி வருகிறார்கள். பா.ஜ.க எதிர்ப்பில் எடப்பாடி பழனிசாமி ஆர்வமின்மையாக இருப்பதே, உடைந்த கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு இருப்பது என்பதற்கான அறிகுறிகள்தான்.” என்றனர் விரிவாக.

பாஜக தரப்பிலும் அண்ணாமலை அல்லாத ஒருவரை மாநில தலைவர் பதவிக்கு கொண்டு வரும் திட்டம் இருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது. அண்ணாமலை அளவுக்கு பாஜகவில் அதிமுக எதிர்ப்பாளர்கள் யாரும் இல்லை. அதனால் தலைவர் மாற்றப்பட்டால் அது அதிமுக - பாஜக கூட்டணி அமைவதை எளிதாக்கிவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Afghanistan: தாலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு - பேசியது என்ன?

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லானி அமிர் கான் முத்தாகியை சந்தித்துள்ளார். துபாயில் நடந்த இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய வளர்ச... மேலும் பார்க்க

மதுரை: முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த பாஜக நிர்வாகி; காரணம் என்ன?

முதல்வர் படத்துடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ஜ.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக நிர்வாகிகள்மனு அளிக்க வந்த மதுரை மாவட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சரவணன் செய்தியாளர்களிடம்... மேலும் பார்க்க

'மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை...' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்; டெல்லிக்குப் பறந்த புகார்

மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலைமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தும் பா.... மேலும் பார்க்க

"காவல் துறையின் அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது.." - சு.வெங்கடேசன் கோபத்தின் காரணம் என்ன?

"டங்ஸ்டன் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளரை குறிவைத்து காவல்துறை இழுத்துச் சென்றது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மதுரை நாடாளும... மேலும் பார்க்க

”திமுக அரசை அதன் கூட்டணிக் கட்சிகள் மயிலிறகால் மென்மையாக எதிர்க்கின்றன” - செம்மலை காட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, தி.மு.கமேயர்சண்.இராமநாதன் செய்கின்ற முறைகேடுகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தபால் நிலையம் எதிரே கண்ட ஆர்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க