ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!
ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.
மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட 300 நாள்கள் வரை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!
ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள தக்லிமகன் பாலைவனத்தின் மையப் பகுதியில் பூமியின் பரிமாணம் மற்றும் புவியியல் சார்ந்த ஆராய்ச்சி செய்வதற்கு ’ஷெண்டிடேக் 1’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக மிக அழமான கிணற்றை தோண்டும் பணியை சீன தேசிய பெட்ரோலியக் கழகம் கடந்த 2023 மே 30-ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், 580 நாள்கள் நீடித்த கிணறு தோண்டும் பணியானது நிறைவுற்றதாக சீன அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை தோண்டுவதற்கு 580 நாள்கள் எடுத்துக் கொண்டதாகவும், இதன் ஆழம் 10,910 மீட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12,000 அடி வரை துளையிடும் கருவி பயன்படுத்தப்பட்டதாக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது ஆழமான கிணறாகும்.
ரஷ்யாவின் கோலா சூப்பர்டீப் போர்ஹோல் எஸ்ஜி-3 என்ற கிணறு, கடந்த 1989ஆம் ஆண்டு தோண்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 12,262 மீட்டர் ஆழமுடைய இந்த கிணறு, உலகில் மனிதர்களால் தோண்டப்பட்ட மிக ஆழமான கிணறாக இருக்கிறது.