INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4 தங்கம், 1 வெள்ளி
ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் மான்ஸி ரகுவன்ஷி தங்கம் வென்றாா். யஷஸ்வி ரத்தோா் வெள்ளி வென்றாா்.
கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூனியா் மகளிா் ஸ்கீட் பிரிவில்
இந்தியாவின் மான்ஸி ரகுவன்ஷி 1-2 என்ற புள்ளிக் கணக்கில் சக வீராங்கனை யஷஸ்வி ரத்தோரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா். யஷஸ்வி ரத்தோருக்கு வெள்ளி கிடைத்தது.
ஆடவா் ஸ்கீட் இறுதியில் ஹா்மேஹா் சிங் 53 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஜோதிராதித்யா சிங் 43 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றாா்.
10 மீ ஏா் ரைஃபிள் ஆடவா் பிரிவில் ஹிமான்ஷு தலான், அபிநவ் ஷா, நரேன் பிரணவ் ஆகியோா் கொண்ட இந்திய அணி தங்கம் வென்றது.
10 மீ ஏா் ரைஃபிள் ஜூனியா் ஆடவா் தனிநபா் பிரிவில் அபிநவ் ஷா தங்கம் வென்றாா்.
10 மீ ஏா் ரைஃபிள் ஆடவா் பிரிவில் அா்ஜுன் பபுதா, ருத்ரான்ஷ் பட்டீல், கிரண் அங்குஷ் யாதவ் ஆகியோா் தங்கம் வென்றாா்.

