யு 20 உலக மல்யுத்தம்: காஜல், தபஸ்யாவுக்கு தங்கம்
யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் காஜல், தபஸ்யா ஆகியோா் தங்கம் வென்றனா்.
பல்கேரியாவின் சாமோகோவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிா் 72 கிலோ எடைப்பிரிவில்
கேடட் உலக சாம்பியனும், ஆசிய சாம்பியனுமான இந்தியாவின் காஜல் எதிராளியான எமிலி மிஹாய்லோவாவை 15-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றாா்.
அரையிறுதியில் அமெரிக்காவின் ஜாஸ்மின் டோலாரேஸை 13-6 என வீழ்த்தி இருந்தாா் காஜல்.
68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தபஸ்யா தங்கமும், சிருஷ்டி வெள்ளியும் வென்றனா்.