மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலா...
ஆசீர்வாத் சினிமாஸின் வெள்ளி விழா..! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் படங்களை தயாரித்து வழங்கும் ஆசீர்வாத் சினிமாஸ் இன்னும் சில தினங்களில் வெள்ளி விழாவை கொண்டாடவிருக்கிறது.
இதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ஆண்டனி பெரும்பாவூர் நடிகர் மோகன்லாலின் உயர்தர கார் ஓட்டுநராக இருந்து பின்னர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.
இதுவரை 35 படங்களை தயாரித்துள்ள ஆசீர்வாத் சினிமாஸின் முதல் படம் நரசிம்மம் ஜன.26, 2000இல் வெளியானது.
தற்போது, 36ஆவது படமாக எல்2: எம்புரான் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை நடிகர் பிருத்விராஜ் இயக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆண்டனி பெரும்பாவூர் கூறியதாவது:
சாகர் அலைஸ் ஜாக்கி ரீலோடட் ஆசீர்வாத் சினிமாஸின் 11ஆவது படம். அமல் நீரத் இயக்கிய படம். லால் சார் மலையாள சினிமாவின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இந்தப் படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
சோபனா மேடம், பாவனா, சுமன், சம்பத், வேணு சேட்டன், பிரணவ், ஜோதிர்மாய் என பலர் இணைந்து நடித்த படம். அமல் நீரத்தின் ஆக்ஷன் -டிராமா கலந்த தனித்துவமான படம்.
ஆசீர்வாத் சினிமாஸின் 25ஆம் ஆண்டு விழாவுக்கு இன்னும் 10 நாள்கள் இருக்கின்றன. எங்களது பயணத்துக்கு உத்வேகமூட்டிய சாகர் அலைஸ் ரீலோடட் படம் நினைவுக்கு வருகிறது. எங்களது கதையில் மறக்க முடியாத பாகமாக இருக்கும் இந்தப் படம் உருவாகதற்கு காரணமாக இருந்த லால் சார், அமல் நீரத், ஸ்வாமி சார் ஆகியோருக்கு எனது நன்றிகள் எனக் கூறியுள்ளார்.