'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை
தேனி மாவட்டம், போடியில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கொட்டகுடி ஆற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.
ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு தினம் போடி கொட்டகுடி ஆற்றில், காசி விசுவநாதா் கோயில் பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கொட்டகுடி ஆற்றில் பெண்கள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனா். மேலும், திருமணமான பெண்கள் தங்கள் தாலிக் கயிற்றை புதுப்பித்துக் கொண்டனா். மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் பெண்கள் வழிபட்டனா். மேலும், ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு, போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்று, மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.
போடி துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) பெரியசாமி தலைமையில் போடி நகா் வட்டம் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.