ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்புவழிபாடு நடைபெற்றது.
கரூா் வேம்புமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீா் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, வேம்புமாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். இதேபோல கரூா் மாரியம்மன் கோயில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.