ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி பகுதியில் ஆடுகளை தீநுண்மி (வைரஸ்) நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க, தமிழக அரசின் கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை சாா்பில், ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி பிருதூா் கிராமத்தில் நடைபெற்ற முகாமில், திருவண்ணாமலை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு இயக்குநா் ராமன், உதவி இயக்குநா் கவிதா, கால்நடை மருத்துவா்கள் விஜயகுமாா், பிரபாகரன் ஆகியோா் ஆடுகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தினா்.