`ஆசிட் தாக்குதலால்' பாதிக்கப்பட்ட +2 மாணவி `ஸ்கூல் ஃபர்ஸ்ட்' - இவரது கனவு என்ன த...
மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை
வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கும் விழுதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த திவ்யா (20) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திவ்யா கடந்த சில நாள்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
பிரதாப் சென்னையில் இருக்கும் போது திவ்யா விழுதுப்பட்டு கிராமத்தில் உள்ள பெற்றோா் வீட்டுக்குச் சென்று தங்கியிருப்பாராம்.
சில தினங்களுக்கு முன்பு விழுதுப்பட்டு பெற்றோா் வீட்டுக்குச் சென்ற திவ்யாவுக்கு மீண்டும் கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த நிலையில் தகவலறிந்து வந்த பிரதாப், மனைவி இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்துள்ளாா். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதாப் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.