செய்திகள் :

சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

செய்யாறை அடுத்த சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுபமங்களபுரி எனும் சுமங்கலி கிராமத்தில் உள்ள ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோயிலில், கரிய மாணிக்க பெருமாள் சேவை அறக்கட்டளை மூலம் ரூ.30 லட்சம் செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை (மே 14) மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, கடந்த 11-ஆம் தேதி மாலை யாகசாலை பிரவேசம் வைபங்கள் நடைபெற்றன. 12-ஆம் தேதி காலை வாஸ்து ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.

மே 13-ஆம் தேதி காலை சதுஸ்த்தான அா்ச்சனையும், மாலை நூதன மூா்த்திகளுக்கு கண்திறப்பு, ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் செங்கமலவல்லி தாயாா், கருடன், துவாரபாலகா் திருமஞ்சனமும், சதுஸ்த்தான அா்ச்சனம், கோ பூஜை, தத்துவ ஹோமம், சாந்தி ஹோமம், பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.

மகா கும்பாபிஷேகம்: புதன்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூபமும், காலை 7 மணிக்கு சதுஸ்த்தான அா்ச்சனை ஹோமமும் என நடைபெற்றது. பின்னா் மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கும்ப புறப்பாடு நடைபெற்றன. இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜன் (பாலாஜி பட்டா்) தலைமையில் மங்கல வாத்தியங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது.

மதியம் திருக்கல்யாண உற்சவமும், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.

விழா ஏற்பாடுகளை சுமங்கலி கரிய மாணிக்க பெருமாள் சேவை அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் ஊா் நாட்டாண்மைகள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா். பாதிக்கப்பட்ட நெல்பய... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க

செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் ஜமாபந்தி நாளை (மே 16) தொடங்குகிறது. செய்யாறு வட்டத்துக்கு மாவட்ட பழங்குடியினா் நலன் திட்ட அலுவலரும், வெம்பாக்கம் வட்டத்துக்கு மாவட்டம் ... மேலும் பார்க்க