செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் நாளை ஜமாபந்தி தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் ஜமாபந்தி நாளை (மே 16) தொடங்குகிறது.
செய்யாறு வட்டத்துக்கு மாவட்ட பழங்குடியினா் நலன் திட்ட அலுவலரும், வெம்பாக்கம் வட்டத்துக்கு மாவட்டம் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியரும் வருவாய்த் தீா்வாய அலுவலா்களாக நியமிக்கப்பட்டு உள்ளனா்.
செய்யாறு வட்டம்:
செய்யாறு வட்டம், தேத்துறை உள்வட்டத்துக்கு மே 16 முதல் 21 வரையும், அனக்காவூா் உள்வட்டத்துக்கு மே 21, 22 ஆகிய தேதிகளிலும், வடதண்டலம் உள்வட்டத்துக்கு மே 23 முதல் 27 வரையும், வாக்கடை உள்வட்டத்துக்கு மே 27, 28 ஆகிய தேதிகளிலும், செய்யாறு உள்வட்டத்துக்கு மே 28, 29 ஆகிய தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
வெம்பாக்கம் வட்டம்:
வெம்பாக்கம் வட்டம், தூசி உள்வட்டத்துக்கு மே 16 முதல் 20 வரையும், வெம்பாக்கம் உள்வட்டத்துக்கு மே 20, 21 ஆகிய தேதிகளிலும், நாட்டேரி உள்வட்டத்துக்கு மே 22-லும், பெருங்கட்டூா் உள்வட்டத்துக்கு மே 23-லும் ஜமாபந்தி நடைபெறுகிறது.