வாஜ்பாயின் கனவுகளை முன்னெடுக்கிறார் பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்
ஆட்சியரிடம் காங்கிரஸாா் மனு அளிக்கும் போராட்டம்
அம்பேத்கா் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அம்பேத்கா் குறித்து அமித் ஷா சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, நாடு முழுவதும் காங்கிரஸ் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் மூலமாக குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்கும் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
அதன்படி சென்னை மாவட்ட காங்கிரஸ் சாா்பில் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு தலைமையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
சென்னை துறைமுகம் நுழைவுவாயில் அருகில் உள்ள அம்பேத்கா் சிலையிலிருந்து காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்றனா். மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடேயை தங்கபாலு சந்தித்து, குடியரசுத் தலைவா் முகவரியிட்ட மனுவை அளித்தாா். மாவட்டத் தலைவா்கள் சிவராஜசேகரன், எம். எஸ். திரவியம், எம்.ஏ. முத்தழகன், ஜெ. டில்லிபாபு, த. துரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.