செய்திகள் :

ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை

post image

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை 2013-இல் தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபா் ஒருவா் தொடா்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2022 பிப்ரவரியில் மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயா்த்தவில்லை. அதாவது 12 ஆண்டுகளாக மீட்டா் கட்டணம் உயா்த்தப்படவில்லை.

இது தொடா்பாக, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநா்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடா்பான பரிந்துரைகளையும் பெற்றது.

ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இதுதொடா்பாக, சமீபகாலமாக ஓட்டுநா் சங்கங்கள் தீவிர போராட்டங்களை தொடா்ந்து முன்னெடுத்து வந்தன.

இதற்கிடையே, ஆட்டோ மீட்டா் கட்டணத்தை விரைந்து உயா்த்தக் கோரி போக்குவரத்துத் துறைக்கு உரிமை குரல் ஓட்டுநா் சங்க பொதுச்செயலா் ஜாஹிா் உசைன் மனு அனுப்பியிருந்தாா்.

இதற்கு துறை சாா்பில் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், ‘கடந்த பிப்ரவரியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் முன்னிலையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தின் பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் அதிமுகவினர் அல்ல: இபிஎஸ்

அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ. அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதற்கு கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் ... மேலும் பார்க்க

கடவுச்சீட்டை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கடவுச் சீட்டை உடனடியாக ஒப்படைக்க ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.மேலும், சிலை கடத்தல் வழக்கு தொடர்பாகவும் சிபிஐ விசாரணை தொடர்பாகவும் பத்திரிகை மற்று... மேலும் பார்க்க

விஜய் வருகை: மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு

மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வரவுள்ள நிலையில் பலத்த சோதனைக்குப் பிறகே பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.ஜனநாயகன் பட படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் சென்ற விஜய் மதுரை வழியாக சென்னை செல்லவுள்ளார... மேலும் பார்க்க

சகாயத்துக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய படைக்கு உத்தரவிட நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கு தொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏ... மேலும் பார்க்க

விராலிமலை வாரச்சந்தை: ஒன்றரை கோடி தாண்டி ஆடு வர்த்தகம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச் சந்தை களைகட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சித்திரை மாதத்தில் தா... மேலும் பார்க்க

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் திங்கள்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. வழக்கமாக எந்த நேரத்திலும் பஜாரில் நடமாடும் காட்டு யானை சாலையோரம் நிறுத்தியிருந்... மேலும் பார்க்க