செய்திகள் :

'எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது' - ஹிமான்ஷி நர்வாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு

post image

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷியின் கருத்து, சமூக வலைதளங்களில் விமரிசனம் செய்யப்படுவதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப். 22 ஆம் தேதி நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் அவரைக் கொல்வதற்கு முன் அவரது மதம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி, "வினய் எங்கிருந்தாலும் அவர் நிம்மதியாக இருக்க வேண்டும். முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதுதான் எங்களின் விருப்பம். யார் மீதும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லீம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பை உமிழ்வதை நான் பார்க்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்'" என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து ஹிமான்ஷியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில் பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.

இதையடுத்து ஹிமான்ஷிக்கு எதிரான விமர்சனங்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

"ஒரு பெண்ணை அவருடைய கருத்து வெளிப்பாடு அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் கேலி செய்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. லெப்டினன்ட் வினய் நர்வால் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால், சமூக ஊடகங்களில் குறிவைக்கப்படும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது" என்று ஹிமான்ஷிக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்? கல்லீரல் கொழுப்பு நோய் வரலாம்! - ஏன்? எப்படி?

வக்ஃப் சட்டத்துக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்கள் தானமாகவும், நன்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஹிந்து அமைப்பு மனு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், வக்ஃப் திருத்தச் சட்டம் இந்தியாவில் முஸ்லிம் சமூ... மேலும் பார்க்க

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கைப் பெயிண்டைப் பூச வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.மேலும், கால்நடை பராமரிப்பு மற்ற... மேலும் பார்க்க

கனடாவில் மோடி உருவபொம்மையை கூண்டில் வைத்து காலிஸ்தானியர்கள் பேரணி!

கனடாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்களை கூண்டில் வைத்து காலிஸ்தான் குழுவினர் பேரணியாகச் சென்றுள்ளனர்.மேலும், கனடாவில் உள்ள ஹிந்துக்களை நாடுகடத்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பியதால் அ... மேலும் பார்க்க

சம்பித் பத்ரா மணிப்பூர் பயணம்: எம்எல்ஏக்களுடன் முக்கிய சந்திப்பு!

பாஜகவின் வடகிழக்கு பொறுப்பாளர் சம்பித் பத்ரா திங்கள்கிழமை மணிப்பூர் வந்து மெய்தி, குகி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இம்பால் விமான நிலையத்தில் தரையிற... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பயங்கரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் பாத... மேலும் பார்க்க