செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு

post image

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பயங்கரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறைவிடத்திலிருந்து இரண்டு வயர்லெஸ் பெட்டிகள், ஐந்து யூரியா பாக்கெட்டுகள், எரிவாயு சிலிண்டர், பைனாகுலர், மூன்று கம்பளி தொப்பிகள், மூன்று போர்வைகள் மற்றும் பாத்திரங்கள் மீட்கப்பட்டன. இரண்டு ஐஇடிகள் எஃகு வாளிகளுக்குள் புதைக்கப்பட்டிருந்ததோடு மூன்று டிபன் பாக்ஸ்களிலும் அடைக்கப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் கூறினர்.

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம்! அணைகளின் மதகுகள் மூடல்!

அரை கிலோ முதல் ஐந்து கிலோ வரை எடையுள்ள பயன்படுத்த தயாராகவிருந்த அனைத்து ஐஇடிகளும், அந்த இடத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. இதனால் எல்லை மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன என்று அதிகாரிகள் மேலும தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22 நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். தாக்குதலைத் தொடா்ந்து தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரத்துக்குப் பின்.. உ.பி. கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக உ.பி. கிராமத்தில் ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு: தள்ளுபடி செய்தது அலாகாபாத் நீதிமன்றம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வழக்கை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி இந்தியா, பிரிட்ட... மேலும் பார்க்க

ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே வழக்கமா? அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம்

புது தில்லி: போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.அமலாக்கத் துறையை உச்ச நீதிமன்றம் கடிந்துகொள்வது இது ஒன்றும் புதிதல்ல..... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் பேசிய புதின்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு ரஷிய அதிபர் புதின் பேசியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம் குறித்து வதந்திகளைப் பரப்புகிறது காங்கிரஸ்: மத்திய அமைச்சர்

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் பூபேந்திரா யாதவ் குற்றம் சாட்டினார். தில்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், சமூக நீதி, பொருளா... மேலும் பார்க்க