செய்திகள் :

'கடல் நாட்டுக்கு சொந்தமானது' - எரிவாயு எடுக்கும் திட்டத்தை மீனவர்கள் எதிர்ப்பதால் காட்டமான பொன்னார்

post image

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "விகிதாச்சார முறையில் நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் சாதி வாரி கணக்கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதே சமயம் அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸும் இந்தியா கூட்டணியும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முயன்றன. பீகார் தேர்தலுக்காக சாதிவாரி கணெக்கெடுப்பு நடத்துவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பீகார் தேர்தலுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்ததாக கூறினால் தமிழக தேர்தலுக்காக நடத்துவதாக அவர் கூறுவாரா?.

`மோடி தந்த அமிர்த கலசத்தை இழந்து விட்டோம்’

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழிஞ்ஞம் வர்த்தகத் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. கன்னியாகுமரியில் 28,000 கோடி ரூபாய் செலவில் வர்த்தக துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திமுக காங்கிரஸ் மற்றும் மதவாதிகள் தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் சமுதாயம் வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தந்த அமிர்த கலசத்தை நாம் இழந்து விட்டோம்.

மனோ தங்கராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் முன்பு செயல்பட்டது போல் இனிமேல் அவர் இருக்க வேண்டாம்" என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துபேசிய பொன்.ராதாகிருஷ்ணர், "கடல் எல்லோருக்கும் சொந்தம். நாட்டுக்குச் சொந்தமானது கடல். அது எனக்குத்தான் சொந்தம் எனக்கூறி அடம்பிடித்தால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த நாடு முக்கியம். நாளைக்கு முக்கியமான சில இடங்களில் கிராமங்களை காலிபண்ணிவிட்டு கடற்படைக்கு தேவைப்படுகிறது எனச்சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பு

சீனா வந்து அடித்தாலும் பரவாயில்லை, 48 மீனவ கிராமங்களும் அழிந்தாலும் பரவாயில்லை, நேவி வரக்கூடாது எனச்சொல்லுவீர்களா. ஒட்டுமொத்த கன்னியாகுமரியும் அழிந்தாலும் பரவாயில்லை என நீங்கள் சொல்லுவீர்களா. இங்கு நேவி வரக்கூடாது என நான் வேண்டுமானால் அவர்களுக்காகச் சொல்லலாம். ஏனென்றால் நான் தனி கட்டை. மீனவர்கள் கடல்கடந்து மற்ற இடங்களுக்கு எல்லாம் போகிறார்கள்தானே. அங்கு நடக்கும் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் பார்க்கத்தானே செய்கிறார்கள். அந்த அரசாங்கங்கள் எப்படி நடந்துகொண்டிக்கிறார்கள். அதுபோல நாமும் நடக்க பழகணும்" என்றார்.

'மண், மலை, கடல் வளங்கள் அதானிக்கு சொந்தம் என்பதே பாஜக கொள்கை' - பொன்னாருக்கு மனோ தங்கராஜ் பதிலடி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பா.ஜ.க தங்களுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அங்குள்ள மக்களின் எண்ணங்களை திசை திருப்புவதற்கு, மக்களை குழ... மேலும் பார்க்க

"வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை வேண்டாம்" - அமித் ஷாவுக்கு அன்பில் பதில்

தேசிய கல்விக் கொள்கையை எப்படியாவது தமிழ்நாட்டு அரசை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும் என மத்தியில் இருக்கும் பா.ஜ.க ஐந்தாண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வருகிறது.ஆனால், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் த... மேலும் பார்க்க

Karl Marx: '21-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்' - கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் பகிர்வு

நவீன உலக வரலாற்றை நான்கு பாகங்களாக எழுதிய வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம், ‘புரட்சியின் யுகம்: 1789-1848’ என்கிற முதல் பாகத்தை இப்படித் தொடங்குகிறார்: ‘ஆவணங்களைவிட சொற்கள் பல நேரங்களில் உரத்துப் பேசு... மேலும் பார்க்க

Trump : 'தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' - அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கும் படங்களுக்கு 100% வரி

'அமெரிக்காவின் உற்பத்தியை ஊக்குவிக்கிறேன்...', 'அமெரிக்காவின் பொருட்களை ஊக்குவிக்கிறேன்...' போன்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' பிரசார வரிசையில், 'அமெரிக்கப் படங்களும்' தற்... மேலும் பார்க்க

`பஞ்சாப்பிற்குள்ளும் பாஜக நுழையும்' - சீக்கியர் கருத்துக்கு ராகுல் காந்தி சொன்ன பதில்!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 'ப்ளூ ஸ்டார்' ஆப்ரேஷன் இந்தியா நன்கு தெரிந்ததே. இது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் சமீபத்தில் ஒரு சீக்கியர் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த... மேலும் பார்க்க