கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்
ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாவட்ட துணை அமைப்பாளா் மு.செல்லதுரை தலைமையில் ரோட்டுக்கடை பகுதிமக்கள் வியாழக்கிழமை தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வழங்கிய மனுவில், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சிக்குள்பட்ட ரோட்டுக்கடை பகுதிகளில் தண்ணீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.
சாலைகளில் இருபுறமும் முள்கள் நிறைந்து புதராக காட்சியளிக்கிறது. மேலும் ரோட்டுக்கடையில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் சமுதாயக்கூடம் திறக்கப்படாமல் உள்ளது. அவற்றை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.