ஆண்டாள் கோயிலில் தோரண வாயில் அமைக்க பூமிபூஜை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன் ரூ.20 லட்சத்தில் தோரண வாயில் அமைக்க வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் மனோகரன் சாா்பில், தோரண வாயில் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கீழரத வீதியிலிருந்து ஆண்டாள் சந்நிதி செல்லும் வழியில் தோரண வாயில் அமைக்க திட்டமிட்டு, வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

இதில் உபயதாரரான அறங்காவலா் குழு உறுப்பினா் மனோகரன், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையா் இளங்கோவன், ஆண்டாள் கோயில் செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், சிவகாசி விஸ்வநாதா் கோயில் செயல் அலுவலா் கலாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.