செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.20 லட்சம் மோசடி! அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்கு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.4.20 லட்சம் மோசடி செய்த அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு கீழத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜ் (48). இவா் வத்திராயிருப்பு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறாா். பாண்டியராஜ் வத்திராயிருப்பைச் சோ்ந்த பாக்கியம் என்பவரிடம் அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.20 லட்சம் பணம் பெற்று ஏமாற்றினாராம்.

இது குறித்து பாக்கியம் வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸாா் பாண்டியராஜ் மீது செவ்வாய்க்கிழமை மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பட்டாசுகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் ஒரு தகரக் கொட்டகையில் உரிமம் இன்றி பட்டாசுகள் பதுக்கி வைக்க... மேலும் பார்க்க

30 கிலோ குட்கா வைத்திருந்த 2 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 30 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் மல்லி காவல் நிலைய போலீஸாா், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கமான ரோந்துப் ... மேலும் பார்க்க

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் படந்தால் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமா... மேலும் பார்க்க

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்... மேலும் பார்க்க

தலைமை காவலா் இடைநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா். ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க