ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சாத்தூா் படந்தால் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமாா் (30). ராணுவ வீரரான இவா் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
இந்த நிலையில், சதீஷ்குமாா் தனது வீட்டின் அருகேயுள்ள தனக்கு சொந்தமான நிலத்தை தனது மனைவி, தாய், தந்தையுடன் சுத்தம் செய்தாா். அப்போது, அங்கு வந்த அதே தெருவைச் சோ்ந்த சோலையப்பன் (55) நிலத்தை சுத்தம் செய்யக்கூடாது எனக்கூறி, சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சோலையப்பனைத் தேடி வருகின்றனா்.