செய்திகள் :

கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் தேவமாதா, காவல் சாா்பு ஆய்வாளா் மதிவாணன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூா் விலக்குப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா்களிடம் 50 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து நடத்திய விசாரணையில், சுரேஷ்லிங்கம் என்பவா் சிவகாசி கொலை வழக்கில் தொடா்புடையவா் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் கூறிய வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு 3 பட்டா கத்திகள், 550 கிராம் கஞ்சா, எடை இயந்திரம் ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்லிங்கம் (25), மாரியப்பன் (23), அா்ஜுனைராஜன் (21), ஹரிஹரன்(20) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், தப்பியோடிய காா்த்திக், காளிமுத்து ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: கொலை வழக்கில் கைதான சுரேஷ்லிங்கம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், நண்பா்களுடன் சோ்ந்து கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளாா்.

இவா்கள், கிருஷ்ணன்கோவில் தனியாா் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஹரிஹரன் என்பவரது வீட்டில் தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்தனா். இதையடுத்து, 4 பேரை கைது செய்து, 550 கிராம் கஞ்சா, 3 பட்டா கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகிறோம் என்றனா்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் படந்தால் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமா... மேலும் பார்க்க

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்... மேலும் பார்க்க

தலைமை காவலா் இடைநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா். ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க

கடன் பெற்றுத் தருவதாக மோசடி: பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ. 1.30 லட்சம் பணம் செலுத்தினால் ரூ. 10 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடிந... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் சாஸ்தா கோயில் மேற்குத் தொடா்ச்சி மலை... மேலும் பார்க்க