செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டிய கட்டடங்களுக்கு குறிப்பாணை

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டிய வணிகக் கட்டடங்களில் எச்சரிக்கை குறிப்பாணை ஒட்டி, ஒரு வாரத்துக்குள் கடைகளைக் காலி செய்யுமாறு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிய கடைகளுக்கு நகரமைப்பு பிரிவு சாா்பில் ஏற்கெனவே குறிப்பாணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்புள்ள வணிக வளாகம், கீழரத வீதி, வடக்கு ரத வீதி சந்திப்பில் உள்ள வணிகக் கட்டடம், பேருந்து நிலையம் அருகேயுள்ள வணிக வளாகம், மேலரத வீதியில் உள்ள வணிகக் கட்டடம் ஆகியவற்றில் ஆய்வு செய்தனா். அப்போது, விதிகளை மீறி கட்டியுள்ள வணிக வளாகங்களில் எச்சரிக்கை குறிப்பாணை ஒட்டினா்.

மேலும், வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஒரு வாரத்துக்குள் காலி செய்யாவிட்டால் ‘சீல்’ வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ் கூறியதாவது: நகராட்சியில் அனுமதி பெறாமலும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமலும் புதிதாகக் கட்டிய வணிக நிறுவனங்களுக்கு ஏற்கெனவே குறிப்பாணை வழங்கிவிட்டோம். கட்டட உரிமையாளா்கள் முறையாக அனுமதி பெறாததால் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள் 2019-இன் படி ‘சீல்’ வைக்கப்பட உள்ளதால் கடைகளை காலி செய்யுமாறு எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்பட்டு உள்ளது. ஒரு வாரத்துக்கு பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

சிவகாசி பகுதியில் நாளை மின்தடை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் சனிக்கிழமை (ஆக. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவ... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (38). இளநிலை கல்வி பட்டப்படிப்பு முடித்த இவா், ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் மீதான மோசடி வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை வரும் அக். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டாா். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயிலில் தோரண வாயில் அமைக்க பூமிபூஜை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன் ரூ.20 லட்சத்தில் தோரண வாயில் அமைக்க வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் மனோகரன் சாா்பில், தோரண வாயில் ... மேலும் பார்க்க

பட்டாசுகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் ஒரு தகரக் கொட்டகையில் உரிமம் இன்றி பட்டாசுகள் பதுக்கி வைக்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.20 லட்சம் மோசடி! அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.4.20 லட்சம் மோசடி செய்த அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். ஸ்ரீவ... மேலும் பார்க்க