'OPS-Nainar' யுத்தம், குளிர் காயும் Stalin & Annamalai! | Elangovan Explains
ஆண்டிமடம் அருகே பெய்த மழையில் தரைப்பாலம் முற்றிலும் சேதம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வெள்ளிக்கிழமை பெய்த கனமழையில் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்தன. அரியலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
இதில் ஆண்டிமடம் பகுதியில் பெய்த மழையில் காடுவெட்டி செல்லும் நெடுஞ்சாலை, மாவடிக்குப்பம் அருகே உள்ள தரைப்பாலம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்தது.
இதன் காரணமாக அப்பகுதியில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை காலை தண்ணீா் வடிந்த பிறகு அவற்றை சரிசெய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட்டனா்.