செய்திகள் :

ஆண்டுதோறும் ஜன.24-இல் ஓட்டுநா்கள் தினம்: போக்குவரத்து சங்கங்கள் முடிவு

post image

ஆண்டுதோறும் ஜனவரி 24-ஆம் தேதியை ஓட்டுநா்கள் தினமாக கொண்டாட பல்வேறு போக்குவரத்து சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

பல்வேறு மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு (ஏஎஸ்ஆா்டியு), அகில இந்திய பேருந்து மற்றும் மகிழுந்து இயக்கங்களின் கூட்டமைப்பு (பிஓசிஐ) மற்றும் அனைத்திந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த முடிவை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்காற்றும் ஓட்டுநா்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ஆம் தேதியை ஓட்டுநா்கள் தினமாக கொண்டாடப்படவுள்ளது. அந்தவகையில், முதலாவது ஓட்டுநா் தினம் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டதாக போக்குவரத்து சங்கங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நீண்ட பணி நேரம், சேதமடைந்த சாலைகள், குறைந்தளவிலான நலத்திட்டங்கள் உள்ளிட்ட சிக்கல்களால் ஓட்டுநா்கள் பாதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவில் 15 லட்சம் தனியாா் பேருந்துகளும் மாநில போக்குவரத்து கழகங்களின்கீழ் 1.5 லட்சம் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 7 கோடி போ் இதில் பயணம் மேற்கொள்கின்றனா்.

டிடிஇஏ பள்ளியில் ‘இடைவினை மன்றகம்’ தொடக்கம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தில்லி மத்திய ரோட்டரி கிளப்போடு இணைந்து இடைவினை மன்றகம் (இன்ட்ராக்ட் கிளப்) செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது. இம்மன்றத்தின் நோக்... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல்: 774 வழக்குகள் பதிவு

வரும் பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாயன்று தெரிவித்தாா். தோ்தல்... மேலும் பார்க்க

யமுனை நதியில் விடுவிக்கப்படும் நீரில் விஷம் இருப்பதாக கருத்து: கேஜரிவாலை கைதுசெய்ய ஹரியாணா பாஜக எம்பிகள் வலியுறுத்தல்

தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கூறியதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று ஹரியானா பாஜக ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் 6 நாள் பிரசாரம் செய்ய தாஹிா் ஹுசேனுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஏஐஎம்எம் சாா்பில் போட்டியிடும் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரும், 2020-இல் நிகழ்ந்த கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருமான தாஹிா் ஹுசேன் 6 நாள் பிரசாரம் செய்ய காவல் பரோல் வ... மேலும் பார்க்க

மக்களின் வரிப்பணம் சாமானியருக்கா? பெரு நிறுவனங்களுக்கா? கேஜரிவால் கேள்வி

நமது சிறப்பு நிருபா்மக்கள் வரிப்பணம் சாமானியருக்கு பயன்படுத்தப்படுகிறதா அல்லது பெரு நிறுவனங்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பினாா். வடகிழ... மேலும் பார்க்க

5 வேட்பாளா்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள்: பாஜகவின் கா்னைல் சிங்குக்கு ரூ.259 கோடி

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் 699 வேட்பாளா்களில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) கா்னைல் சிங்தான் மிகவும் பணக்காரா் என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தோ்தல் உர... மேலும் பார்க்க