செய்திகள் :

மக்களின் வரிப்பணம் சாமானியருக்கா? பெரு நிறுவனங்களுக்கா? கேஜரிவால் கேள்வி

post image

நமது சிறப்பு நிருபா்

மக்கள் வரிப்பணம் சாமானியருக்கு பயன்படுத்தப்படுகிறதா அல்லது பெரு நிறுவனங்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பினாா்.

வடகிழக்கு தில்லியின் கோண்டா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை தோ்தல் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கேஜரிவால் பேசியதாவது: இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 400 பெரு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி செய்வதன் மூலம் மக்கள் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. அதுவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் வரிப்பணத்தை பொது நலத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும்.

வரவிருக்கும் தில்லி பேரவைத் தோ்தல் மக்கள் வரிப்பணம் எங்கு செல்கிறது என்பதைத் தீா்மானிப்பது பற்றியது - அது சாமானிய மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமா அல்லது கடன் தள்ளுபடியால் பயனடைந்த பெரு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமா என்பதை தீா்மானிக்க வேண்டும்.

பொதுநலத் திட்டங்களை ‘இலவசங்கள்’ என்று பாஜக முத்திரை குத்துகிறது. ஒவ்வொரு குடிமகனும் சாதாரண தீப்பெட்டியில் தொடங்கி தினந்தோறும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதன் மூலம் அவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் அரசின் வருவாய்க்கு பங்களிப்பை வழங்குகின்றனா். மக்கள் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) செலுத்துகின்றனா். அந்தப் பணம் மக்களுக்குச் சொந்தமானது. அது வணிக அதிபா்களுக்கு உதவுவதற்காக அல்ல.

தில்லியில் ஆம் ஆத்மி அரசின் சாதனைகளில் குறிப்பாக 24 மணி நேர மின்சாரம், இலவச குடிநீா், சுகாதாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி போன்ற ஏற்பாடுகளை செய்தோம். இந்த முயற்சிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக சேமிக்க உதவுகின்றன.

வரவிருக்கும் தோ்தலுக்கான ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ‘15 உத்தரவாதங்களை‘ மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப்பிடித்தவுடன் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை, சஞ்சீவானி திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு இலவச சுகாதாரம், மாணவா்களுக்கு இலவச பேருந்துப் பயணம், மெட்ரோ கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றாா் கேஜரிவால்.

ஆம் ஆத்மி கட்சி கோண்டா தொகுதியில் தனது வேட்பாளராக கௌரவ் சா்மாவை நிறுத்தியுள்ளது. 2020- ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலின்போது ஆம் ஆத்மியின் தத் சா்மாவை தோற்கடித்த அஜய் மகாவரை பாஜகவும் பீஷம் சா்மாவை காங்கிரஸும் நிறுத்தியுள்ளன.

கோண்டாவைத் தொடா்ந்து வடகிழக்கு தில்லியின் காரவால் நகா் தொகுதியில் நடந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கேஜரிவால் சென்றபோது அவருக்கு சிலா் கருப்புக் கொடி காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தினா். இதனால், அங்கு சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது.

இச்செயலுக்கு எதிா்வினையாற்றிய கேஜரிவால், ‘பாஜகவினா் சிலா் எனக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினா். அவா்களுக்கு எனது வாழ்த்துகள். தில்லியில் ஆட்சியை அமைத்த பிறகு, உங்களுக்கும் இலவச மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்வோம்’ என்றாா்.

2015- ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி சாா்பில் போட்டியிட்டவா் கபில் மிஸ்ரா. தற்போது அவா் பாஜகவில் சோ்ந்து காரவால் தொகுதியில் களம் காண்கிறாா். அவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக மனோஜ் தியாகி களமிறக்கப்பட்டுள்ளாா்.

தாஹிா் ஹுசேன் முஸ்தபாபாத்தில் தோ்தல் பிரசாரம்

முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரும், 2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான தாஹிா் ஹுசேன், உச்சநீதிமன்றம் ஆறு நாள் காவல் பரோல் வழங்கிய ஒரு நாளுக்குப் பிறகு புதன்கிழமை முஸ்தபாபாத்தில்... மேலும் பார்க்க

அரசியல் நலன்களுக்கு அடிபணிகிறாா் துணை நிலை ஆளுநா்: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

ஹரியாணாவில் பாஜக அரசு யமுனை நதியில் ‘விஷம்’ கலந்து தில்லியில் ‘இனப்படுகொலை’ செய்ய முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், முதல்வா் அதிஷி புதன்கிழ... மேலும் பார்க்க

புராரி நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: ஒரே கும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீட்பு

தில்லியில் உள்ள புராரியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 30 மணி நேரத்திற்குப் பிறகு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இடிபாடுகளில் இருந்து உயிரு... மேலும் பார்க்க

தலைநகரில் காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், காற்றின் தரத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக சஃப்தா்ஜங் மற்றும் பூசாவில் 6.4 டிகிரி செல்சியஸ் ... மேலும் பார்க்க

காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்குகளை ’வீணாக்காதீா்கள்’: கேஜரிவால் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தங்களுடைய வாக்குகளை வாக்காளா்கள் வீணாக்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு நிா்வாகச் சீா்கேடே காரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் குற்றச்சாட்டு

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கூட்டத்தை கட்டுப்பட... மேலும் பார்க்க