VCK: "விஜய்க்கு அந்த துணிச்சல் இருக்கிறதா?"- ஆளூர் ஷாநவாஸ் கேள்வி
ஆண்பாவம் பொல்லாதது வெளியீட்டுத் தேதி!
ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.
குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் வருகிற அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ ராஜும், மாளவிகா மஜோஜும் இணைந்து நடித்த ஜோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பெருமையாக இருக்கிறது லால்: மம்மூட்டி