ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு பிராட்பேண்ட் டெக்னீஷியன் பயிற்சி
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளா் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீஷியன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளா் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தொழில்நுட்ப பயிற்சியாளா் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சோ்ந்து பயில பிளஸ் 2 தோ்ச்சி, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு (டிப்ளமோ) மற்றும் ஏதேனும் பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். இந்தப் பயிற்சி முடித்த உடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
இந்தப் பயிற்சியில் சேர ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 94450-29552, 0421-2071112 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.