செய்திகள் :

ஆதி புருஷ் இயக்குநர் கலாமுக்கு காவி சாயம் பூசுகிறாரா? ரசிகர்கள் கேள்வி!

post image

நடிகர் தனுஷ் நடிக்கும் கலாம் படத்தின் போஸ்டர் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

மேலும், ’தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரின் படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், எதிர்பாராத விதமாக ஆதி புருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கும் ‘கலாம் - தி மிஷைல் மேன் ஆஃப் இந்தியா’ என்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தனுஷ், “உத்வேகம் மற்றும் பெருமைமிக்க தலைவரான நமது அப்துல் கலாம் ஐயாவின் வாழ்க்கையைச் சித்திரிப்பதில், நான் உண்மையிலேயே பாக்கியவானாக உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் கதை அப்துல் கலாம் எழுதிய ’அக்னி சிறகுகள்’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறதாம்.

இந்த நிலையில், படக்குழு வெளியிட்ட போஸ்டரில் கலாமின் பெயருக்கு மட்டும் காவி நிறம் பூசப்பட்டு மற்ற பெயர்களுக்கு நீலம் மற்றும் வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேசியக் கொடியின் வண்ணங்களில் ஒன்றான பச்சை எங்குமே பயன்படுத்தப்படவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த சில ரசிகர்கள் ஆதி புருஷ் எடுத்த இயக்குநர் கலாமுக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார். அவர் எல்லோருக்குமான தலைவர்; உங்கள் அரசியல் விளையாட்டுகளுக்காக புனிதமாகக் கருதப்படும் கலாமின் பெயரைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்?

‘மெட்ராஸ் மேட்னி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் ம... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு எப்போது முடியும்? ரஜினி பதில்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். இதில், கூலி ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிற... மேலும் பார்க்க

லவ் மேரேஜ் படத்தின் புதிய பாடல் வெளியீடு!

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படமான ‘லவ் மேரேஜ்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள புதிய படம் 'லவ் மேரேஜ்'.இதில், நாயக... மேலும் பார்க்க

நடிகை ஹிமா பிந்துவின் புதிய தொடர்!

நடிகை ஹிமா பிந்து நடிக்கவுள்ள புதிய தொடர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இளைய தலைமுறையினரையும் தொடர்கள் கவர்ந்துள்ளது. க... மேலும் பார்க்க

ஒத்திகை செய்யாமல் படப்பிடிப்புக்குச் செல்ல மாட்டேன்: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு படத்திற்கு நடிப்பு ஒத்திகை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாயகன் படத்திற்குப் பின் கமல் - மணிரத்னம... மேலும் பார்க்க

500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர் 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.சிங்கப் பெண்ணெ தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாள்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து டி... மேலும் பார்க்க