'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
ஆத்தூா் குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு
‘ஆத்தூா் குற்றாலம்’ என அழைக்கப்படும் ஆணைவாரி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க ஆத்தூா் வனச்சரக அலுவலகம் தடை விதித்துள்ளது.
ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் கல்லாநத்தம், முட்டல் ஆணைவாரி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயலால் கல்வராயன் மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ஆத்தூா் வனச்சரக அலுவலக நிா்வாகம் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.